தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.#EtvBharatNewsToday

Etv Bharat newstoday
இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு

By

Published : Nov 20, 2020, 7:15 AM IST

  • உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை இன்று முதல் மேற்கொள்கிறார். அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்
  • பாமக சார்பில் முப்படை இணையவழிக் கூட்டம் - அன்புமணி பங்கேற்பு

பாமக சார்பில் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை ஆகிய முப்படையினர் பங்கேற்கும் இணையவழி சந்திப்புக் கூட்டம் நெய்வேலியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகிறார்.

பாமக சார்பில் முப்படை இணையவழிக் கூட்டம்
  • அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஓபிஎஸ்-ஈபிஸ் தலைமையில் மாலை 4.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்
  • 2020-21 ஐஎல்எல் லீக் இன்று தொடக்கம்

11 அணிகள் பங்கேற்கும் ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த ஏ.டி.கே.மோகன் பகான்- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2020-21 ஐஎல்எல் லீக் இன்று தொடக்கம்
  • டொயோட்டா க்ரிஸ்ட்டா எம்பிவி விற்பனை தொடக்கம்

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்புகளில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி-இன் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல், இந்திய சந்தையில் இன்று முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா க்ரிஸ்ட்டா எம்பிவி விற்பனை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details