மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன், மாநில தேர்தல் ஆணையம் இன்று (செப்.06) ஆலோசனை நடத்துகிறது.
தர்மபுரி வரும் அண்ணாமலை
தர்மபுரி டிஎன்சி திருமண மண்டபத்தில் இன்று (செப்.06) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.
கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ஆவணி அமாவாசையை முன்னிட்டு பேரூர், மருதமலை உள்ளிட்ட நான்கு கோயில்களில் இன்று (செப்.06) அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அனுமதி கடிதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காலியாகவுள்ள இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு இன்று (செப்.06) நடைபெறுகிறது.
சதுரகிரி கோயிலுக்கு செல்லஅனுமதி மறுப்பு
கரோனா தொற்று பரவல் காரணமாக,இன்று (செப்.06) அமாவாசையை முன்னிட்டு, தாணிப்பாறை மலை அடிவாரத்துக்கும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வர பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு
கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதை அடுத்து கர்நாடகாவில் முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று (செப்.06) இரண்டாம் கட்டமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் மாறுபட்டு வரும் நிலையில் இன்றைய (செப்.06) பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 98.96 ரூபாயகவும், டீசல் ஒரு லிட்டர் 93.26 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்.06) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.