தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தாெகுப்பு!#EtvBharatNewsToday - ஈடிவி பாரத் இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.#EtvBharatNewsToday

EtvBharatNewsToday
இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தாெகுப்பு

By

Published : Sep 1, 2020, 7:45 AM IST

Updated : Sep 1, 2020, 8:43 AM IST

பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி

குடியரசு முன்னாள்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் இறுதி அஞ்சலிக்காக டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. முக்கியப் பிரமுகர்கள் காலை 9.15 முதல் 10.15 வரை அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

குடியரசு முன்னாள்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இறுதி அஞ்சலி

பிரணாப் முகர்ஜி மறைவு - அனைத்து அரசு அலுவலகங்களும் மூடல்

குடியரசு முன்னாள்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக மேற்கு வங்கம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு, அரசு சார்ந்த அலுவலகங்கள் இன்று மூடப்படுகின்றன.

குடியரசு முன்னாள்தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு

ஜே.இ.இ. தேர்வுகள் தொடக்கம்

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜே.இ.இ. உள்ளிட்ட முக்கியத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று நடைபெறுகின்றன. செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி இத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.

ஜே.இ.இ. தேர்வுகள் தொடக்கம்

பேருந்துகள் மீண்டும் இயக்கம்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் பேருந்துகள் சேவை ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மாவட்டங்களுக்கிடையேயான பேருந்துகள் இயக்குவதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதலின்படி பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

பேருந்துகள் மீண்டும் இயக்கம்

கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாலை முதலே பக்தர்கள் கோயில்களில் தரிசனம் செய்யத் தொடங்கியுள்ளனர். அரசின் நெறிமுறைப்படி பக்தர்கள் கோயில்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
Last Updated : Sep 1, 2020, 8:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details