- தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த 4 நாள்களாக கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில் இன்றும் குளிர் வானிலையை நிலவும் என தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) சஃப்தர்ஜங், பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அருகில் நிற்கும் நபரை பார்க்க கூட முடியாத அளவிற்கு மூடுபனி காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
- தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை முழுக்கொள்ளவை எட்டிவருவதால், முல்லை பெரியாற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் சனிக்கிழமை காலை நிலவரப்படி 69 அடியாக உள்ளது.
- இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையின் காலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. முதலில் ஆடிய இங்கிலாந்து 421 ரன்கள் குவித்தது. 130 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இலங்கை இன்று (ஜன.17) நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்கிறது. திரிமன்னே 76 ரன்னுடனும், எம்புல்டேனியா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
- புதுச்சேரி சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன.18) கூடுகிறது. இதனை சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையானது ஆறு மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்பது சட்டவிதி. கடந்த முறை, புதுச்சேரி சட்டப்பேரவை ஜூலை மாதம் 20ஆம் முதல் 25ஆம் வரை தேதி வரை கூடியது நினைவுக் கூரத்தக்கது.
- புதிய வகை உருமாறிய கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் பிரிட்டனில் பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ஜன.18 (திங்கள்கிழமை) முதல் நாட்டின் எல்லைகளை மூடப்போவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவும் தன்மை 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தந்தை ஹிமான்ஸூ (71) மாரடைப்பால் சனிக்கிழமை (ஜன.16) காலமானார். ஹர்திக் பாண்ட்யாவின் தந்தை மறைவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், விராத் கோலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாகிஸ்தானில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் நாளை (ஜன.18) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிகள் இன்று தொடங்குகின்றன.
- இன்று மக்கள் திலகம் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள்.
இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு! - ஹர்திக் பாண்ட்யா
இன்றை முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பை காணலாம்.
Etv Bharat news Today Jan17 news Today குளிர் வைகை அணை இலங்கை இங்கிலாந்து புதுச்சேரி சட்டப்பேரவை ஹர்திக் பாண்ட்யா எம்ஜிஆர்