தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆரோவில் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கான குறும்பட போட்டி

ஆரோவில் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகள் மற்றும் பரித் தொகைகள் குறித்தும் வெளியிட்டுள்ளது.

Etv Bharat ஆரோவில் அறக்கட்டளை
Etv Bharat ஆரோவில் அறக்கட்டளை

By

Published : Sep 7, 2022, 7:39 AM IST

சென்னை: ஆரோவில் அறக்கட்டளை, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் விதமாகவும், ஸ்ரீ அரவிந்தரின் 150ஆவது பிறந்த நாள் விழா நிணைவாகவும், பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான மாணவர்களுக்கு சர்வதேச அளவில் கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான படைப்பாற்றல் போட்டியாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் கட்டுரை போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், கட்டுரை மற்றும் குறும்பட போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளாக,

1) ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் அமையும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் குறும்படத்தின் தலைப்பு "ஸ்ரீ அரவிந்தரும் ஆரோவில்லும் இந்தியாவின் மேன்மைக்கு புத்தொளியூட்டுதல் ".

2) ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கல்லூரி/பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் குறும்படத்தின் தலைப்பு "ஸ்ரீ அரவிந்தரும் ஆரோவில்லும் மனித குலத்திற்கு இந்தியாவின் கொடை"

கட்டுரைகள் A4 அளவு தாளில் ஒரு பக்கத்திற்கு 20 வரிகள் வீதம் மொத்தம் 3000 சொற்கள் என 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பின் கட்டுரையினை PDF கோப்பு வடிவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக குறும்படத்தின் கால அளவு 5-7 நிமிடங்களிலும், அவை .mp4, .avi அல்லது .mpeg கோப்புகளின் வடிவத்திலும் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் குறும்படங்களை யூடியூப் அல்லது பொது வழியில் அணுகக்கூடிய பிற ஒளித்தோற்றத் தளங்களில் பதிவேற்றலாம்.

முக்கியமாக காணொளியை புது உள்நுழைவு மூலம் காண்பதாய் இருத்தல் கூடாது. மேலும், கோப்புகளை https://filetransfer.io/ அல்லது https://wetransfer.com/ வழியாகவும், கீழே விளக்கப்பட்டுள்ள படி, சமர்ப்பிப்பு செயல்முறையின் மூலம் தொடர்புடைய இணைப்புகளைப் பகிரவும்.

கட்டுரைகள் 16 செப்டம்பர் 2022 அன்று மாலை 6.00 மணிக்குள் (IST) அல்லது அதற்கு முன்பாகவோ சமர்ப்பித்தல் வேண்டும். அவை எண்ணிம வடிவில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்படல் வேண்டும். சமர்ப்பிக்கும் மின்னஞ்சலில் கட்டுரைகளுக்காக இணைக்கப்பட்ட PDF ஆவணம் சமர்ப்பித்தல் வேண்டும். குறும்படங்கள் https://www.aurobindo150shortfilm.com/ என்ற தளத்தில் பதிவேற்றப்பட்ட / மாற்றப்பட்ட காணொளிக் காட்சிக் கோப்பிற்கான இணைப்பு இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு பங்கேற்பாளரின் சமர்ப்பிப்பு மின்னஞ்சல்களிலும் பின்வரும் விவரங்கள் தவறாமல் இருத்தல் வேண்டும்: 1) பெயர், 2) குடியிருப்பு முகவரி, 3) கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, 4) வகுப்பு/தகுதி நிலை/புலம் மற்றும் 5) தொடர்பு கொள்ள வேண்டிய செல்லிடப் பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி. கோரப்பட்ட விவரங்கள் மற்றும் இணைக்கப்பட்ட கோப்புகள்/இணைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள சமர்ப்பிப்புகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

தலைசிறந்த நபர்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரைகள் / குறும்படங்களை மதிப்பீடு செய்யும். பேராசிரியர் இரா. சந்திரசேகரன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் மருத்துவர் சுதா சேஷய்யன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை மதிப்பீடு செய்வர்.

அடுத்ததாக திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் திரு வசந்த். எஸ்.சாய் இரு மொழிகளுக்கான குறும்படங்களையும் மதிப்பிடும் குழுவிற்கு தலைமை தாங்குவார். அந்தந்த குழுக்களின் தலைவராகவும் இருப்பர். குழு ஒவ்வொரு பிரிவிலும் மூன்று வெற்றியாளர்களைப் பரிந்துரைக்கும். கல்லூரி அளவிலான போட்டிக்கு, முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.1.00 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம்), ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்) மற்றும் ரூ. 50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) பரிசாக வழங்கப்படும்.

பள்ளி அளவிலான போட்டிக்கு, முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.75,000 (ரூபாய் எழுபத்தைந்தாயிரம்), ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) மற்றும் ரூ.25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம்) வழங்கப்படும். ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் உரிய நேரத்தில் வழங்கப்படும். பள்ளி அல்லது கல்லூரி மாணவரின் கட்டுரை மற்றூ குறும்படங்களை எட்டு வகைகளில் சமர்ப்பிப்பதற்கான மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல்.

தமிழ் வழி பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை சமர்ப்பிப்புகள்: essay.schools.tamil@auroville.org.in மற்றும் தமிழ் வழி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை சமர்ப்பிப்புகள்: essay.college.tamil@auroville.org.in ஆங்கில வழி பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை சமர்ப்பிப்புகள்: essay.schools.english@auroville.org.in மற்றும் ஆங்கில கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை சமர்ப்பிப்புகள்: essay.college.english@auroville.org.in

ஸ்ரீ அரவிந்தரின் 150ஆவது பிறந்தநாள் மற்றும் சுதந்திர இந்தியாவின் 75ஆவது ஆண்டின் நிறைவு ஆகியவற்றைக் கொண்டாடும் இவ்வேளையில், ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை ஆழமாக ஆராய்வதற்கும், அவற்றை ஒருங்கிணைத்து, பிரதிபலிப்பதற்கும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மாணவர்களை அழைப்பதாக இந்த படைப்பாற்றல் போட்டி அமைந்துள்ளது. அவரது லட்சியங்கள், கருத்துக்கள், நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை குறும்படங்கள் மூலமாகவோ அல்லது கட்டுரைகள் மூலமாகவோ இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்பதன் மூலம் வெளிப்படுத்துங்கள்.

இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: ஆலோசனை வழங்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

ABOUT THE AUTHOR

...view details