தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொங்கல் பண்டிகை விடுமுறை: முதலமைச்சர் வரவேற்பு - எடப்பாடி ட்வீட்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

EPS welcomes pongal holiday announcement
EPS welcomes pongal holiday announcement

By

Published : Nov 27, 2020, 2:49 PM IST

சென்னை:உச்ச நீதிமன்றத்தின் பொங்கல் பண்டிகை விடுமுறை அறிவிப்பு குறித்து முதமைச்சர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள், வடமாநில பண்டிகைகள் சிலவற்றுக்கு மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். தற்போது, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இச்சூழலில் முதலமைச்சர் பழனிசாமியும் அதற்கு வரவேற்பளித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “உச்ச நீதிமன்றத்திற்கு பொங்கல் திருநாள் அன்று விடுமுறை அளிக்கப்பட்டதற்கு தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார வரவேற்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details