ஜெயலலிதாவால் அதிகளவு அடையாளம் காணப்பட்ட ஒருவரின் கீழ் அதிமுக தலைமை செல்ல வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "எதிர்க்கட்சியினர் செய்த பொய் பரப்புரையும், குற்றச்சாட்டையும் பாஜக முறையாக கையாளவில்லை. அதுவே தோல்விக்கு காரணம்” என்று பேசியிருந்தார்.
'கட்சி நிர்வாகத்தை பொது வெளியில் பேச வேண்டாம்..!' - ஈபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கை - o panneerselvam
சென்னை: "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். தேர்தல் முடிவு, கட்சி நிர்வாகம் குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்" என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "அதிமுக செயல்பாடு குறித்து கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவையாக இல்லை. தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்களை அதிமுகவினர் கூற வேண்டாம். அதிமுக நிர்வாக முறை பற்றியோ, முடிவு பற்றியோ பொதுவெளியில் பேச வேண்டாம். முதலமைச்சர் பதவியில் அமர நினைப்பவர்களுக்கு, நமது சொல்லும், செயலும் உதவி செய்திடும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்” என்று கூறப்பட்டுள்ளது.