தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அவதூறு வழக்கு: ரத்துசெய்ய கோரும் ஓபிஎஸ்-இபிஎஸ் - O. PaneerSelvam

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தாக்கல்செய்துள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரியும், வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கக் கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.

அவதூறு வழக்கு
அவதூறு வழக்கு

By

Published : Aug 14, 2021, 1:44 PM IST

அதிமுகவின் செய்தித்தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி கடந்த ஜூன் 14ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இது சம்பந்தமான அறிக்கை, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்கக் கோரி புகழேந்தி, சென்னை எம்பி-எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரில் முன்னிலையாக ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரியும், விசாரணைக்குத் தடை கோரியும், நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு கோரியும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல்செய்துள்ளனர்.

அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உறுப்பினர் ஒருவரை கட்சியிலிருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது எனவும், இதைக் கருத்தில்கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு அழைப்பாணை அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021-2022

ABOUT THE AUTHOR

...view details