தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக பொதுக்குழு விவகாரம் - ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் - சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்
ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

By

Published : Sep 4, 2022, 4:03 PM IST

சென்னை:அதிமுகவில் பொதுக்குழு விவகாரத்தில் நாளுக்கு நாள் மாறுபட்ட தீர்ப்புகளை நீதிமன்றம் பிறப்பித்து வருகிறது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற இரண்டு பேர் கொண்ட அமர்வில் ஈபிஎஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் எனவும், தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பானது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். அந்த வகையில் நாளை (செப் 5) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஈபிஎஸ் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எங்களுடைய தரப்பை கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓபிஎஸ் ஆதரவாளரின் ரூ.50 லட்சத்துடன் மாயமான கார் ஓட்டுநர்

ABOUT THE AUTHOR

...view details