சென்னை:சென்னை நீதிமன்றத்தில் தனி நீதிபதி பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.
நேற்று அதிமுக பொதுக்குழு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நடந்த பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி நேற்று (ஆகஸ்ட் 17) அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவர் வகித்த பதவியும் கலைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவின் பெரும்பான்மையினர் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
கட்சியின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்த தீர்ப்பு கட்சி செயல்பாட்டில் மட்டுமல்லாமல் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தில் தலையிடுவதாகவுள்ளது’ என மனுவில் தெரிவித்துள்ளார்.
தனிநபர் விருப்பத்தை நீதிமன்றம் பிரசாரம் செய்கிறது: ’கட்சி ஒற்றைத்தலைமையை நோக்கி செல்லும் நிலையில் இரட்டைத்தலைமை வேண்டும் என்ற ஒரு தனிநபரின் விருப்பத்தை பிரசாரம் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. உட்கட்சி செயல்பாடு குறித்து நீதிபதி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டது அல்ல.