தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீதிமன்றத்தை தாமதமாக நாடிய ஈபிஎஸ் - எதிர் தரப்பினர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமதமாக மேல்முறையீடு செய்தார். மேலும், அந்த மனுவை விசாரிக்கக் கோரி இடையீட்டு மனுவையும் ஈபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ள நிலையில், எதிர் தரப்பினர் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Eps
Eps

By

Published : Jun 29, 2022, 2:39 PM IST

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 'அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு தொடர அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததில் இருந்து காலதாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருப்பதால், அதை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு இடையிட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த இடையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது.

தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் மேல்முறையீட்டு மனுவை அனுமதிப்பது குறித்து ராம்குமார் மற்றும் சுரேன் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட போட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...

ABOUT THE AUTHOR

...view details