தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக உள்கட்சி தேர்தல்: ஓபிஎஸ் - இபிஎஸ் வேட்புமனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (டிசம்பர் 4) வேட்புமனு தாக்கல் செய்தனர்.

EPS and OPS files nomination for AIADMK top posts, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வேட்புமனு தாக்கல்
அதிமுக உள்கட்சி தேர்தல்

By

Published : Dec 4, 2021, 11:44 AM IST

சென்னை:அதிமுகவில் நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதவற்கான உள்கட்சித் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் அட்டவணையை அக்கட்சி நேற்று முன்தினம் (டிசம்பர் 2) வெளியிட்டது. அதன்படி, இரு ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (டிசம்பர் 3) தொடங்கியது.

இந்நிலையில், ஏற்கனவே தாங்கள் வகித்துவரும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ராயப்போட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 4) வேட்பு மனுவை ஒருசேரதாக்கல் செய்தனர்.

தேர்தல் ஆணையர்களான அதிமுக அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இம்மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க: கழக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கோதா; அதிமுக தொண்டருக்கு தர்ம அடி கொடுத்த ரத்தத்தின் ரத்தங்கள்!

ABOUT THE AUTHOR

...view details