தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள்' - நீதிபதிகள் கடும் விமர்சனம் - இபாஸ்

சென்னை: கரோனா காலத்திலும் இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அலுவலர்கள் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

highcourt
highcourt

By

Published : Aug 8, 2020, 1:17 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 8 முதல் 12ஆம் வகுப்பு மாணவிகளை மீட்கக்கோரி, தமிழ் தேசிய மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு என்பவர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து இ-பாஸ் இல்லாமல் மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையாக விண்ணப்பித்தவர்களால் இ-பாஸ் பெற இயலாத நிலையில், இடைத்தரகர்கள் மூலம் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை லஞ்சம் பெற்று அலுவலர்கள், இ-பாஸ்கள் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

மேலும், கரோனா காலத்திலும், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிராக, இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நூற்பாலைகளிலிருந்து மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக்குழுக்கள் மூலம் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனரா எனக் கண்காணிக்க திடீர் சோதனைகள் நடத்த காவல் துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுக்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ’மருத்துவர்கள், மருத்துவமனை குறித்து தவறான செய்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது’

ABOUT THE AUTHOR

...view details