சென்னை:சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை ஆங்கிலம், இந்தியில் வெளியிடப்பட்டது போல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(பிப்.2) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.