தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநகராட்சி பள்ளிகளில் 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு! - மாநகராட்சி பள்ளிகள் மாணவர் சேர்க்கை

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : Sep 1, 2020, 10:32 PM IST

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 200 மழலையர் வகுப்புகள் இயங்கிவருகின்றன.

இக்கல்வி ஆண்டில் சென்னை பள்ளிகள் அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று இடை நிற்றல் மாணவர்கள், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் விவரங்களை சேகரிக்கவும் மாணவ மாணவியர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் தலைமை ஆசிரியரின் தலைமையில் ஆசிரியர்களை உறுப்பினராக கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகஸ்ட் 19ஆம் தேதி அறிவித்தார்.
அதன்படி அந்தக் குழுவின் மூலமாக சென்னை முழுவதும் ஒரு லட்சம் 60 இலட்சம் வீடுகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் 300 மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தெரியவந்துள்ளது. மேலும் அந்த 300 மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 முதல் 6 வகுப்பு வரை 60 பேர் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை 45 பேர் 9 முதல் 10 வகுப்பு வரை 90 பேர் 11 மற்றும் 12-ம் வகுப்பில் 85 பேர் மொத்தம் இதுவரை 300 பேர் சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 22 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details