தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னைக்கு மின்சாரம்; வட சென்னைக்கு விஷமா? - அது என்ன ETPS திட்டம்! - Environmental activist Nithyanandh Jayaraman statement

எண்ணூர் அனல் மின் நிலையம் அமைப்பதால் வாழத் தகுதியற்ற பகுதியாக வடசென்னை மாறிவருவதாகவும், மக்கள் வாழத் தகுதியான இடங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு வாழத் தகுதியற்ற இடங்களில் அவர்களை மறு குடியிருப்பு செய்வது எந்த வகையில் நியாயம் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னைக்கு மின்சாரம்; வட சென்னைக்கு விஷமா? நித்யானந்த் ஜெயராமன்  எண்ணூர் அனல் மின் நிலையம் அமைப்பதால் வாழ தகுதியற்ற பகுதியாக வடசென்னை  சென்னையில் 6800 குடிசை குடும்பங்கள் பாதிக்கப்ட்டுனர்  ennur thermal power station affected vadachennai people  Environmental activist Nithyanandh Jayaraman statement  Tamilnadu government being partial on minorities
செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்

By

Published : Dec 23, 2021, 7:01 PM IST

சென்னை:சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளரைச் சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் பேசுகையில்,

"தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் திட்டமிடப்பட்டுள்ள 660MW எண்ணூர் அனல் மின் நிலையம் (ETPS) அமைக்கப்பட்டால், அருகிலேயே தமிழ்நாடு வீட்டுநல வசதி வாரியத்தால் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளில் சுமார் 6800 குடிசை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாசு பற்றிய எச்சரிக்கைகளை உள்ளடக்கிய CMDA ஆவணம் ஒன்றை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டி, அனல் மின்நிலையம் அமைக்க ஜனவரி 6 அன்று அறிவிக்கப்பட்டிருக்கும் மக்கள் கருத்து கேட்ட கூட்டத்தை அரசு ரத்துசெய்ய வேண்டும்.

சென்னையை அழகுபடுத்துவது, நீர்வழிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பது, என்ற திட்டத்தின்கீழ் சென்னை மாநகரின் வெவ்வேறு பகுதிகளிருந்து வெளியேற்றப்படவிருக்கும் 38 ஆயிரம் பேருக்கு பாதுகாப்பானதும் நிலையானதுமான குடியிருப்புகளை TNHB கட்டித் தர வேண்டும்.

சிறுபான்மையினர் மீது காழ்ப்புணர்ச்சியா?

இந்த மண்டலத்தில் இருக்கும் மிகக் கடுமையான காற்று மாசுபாட்டையும் நிலக்கரி சாம்பல் கொட்டப்பட்டு நஞ்சாகிப்போன கழிவெளியையும் சுட்டிக்காட்டி இதுபோன்ற இடத்தில் மாநகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு வீடு கட்டுவது என்பது, கட்டமைப்பு ரீதியிலான சமூக சுற்றுச்சூழல் பாரபட்சத்தை அரசு காட்டுகிறது என்றே பொருளாகும்.

சராசரியைவிட அதிகமான விகிதத்தில் பட்டியின மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் வாழும் வடசென்னையைக் குறிவைத்து நச்சு தொழிலகங்கள் காலங்காலமாகப் படையெடுக்கின்றன" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து திருவொற்றியூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பி. சந்தியா பேசியதாவது, "ஏற்கனவே வட சென்னையில் இயங்கிவரும் பல்வேறு தொழிற்சாலைகளால் அங்கு இருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலும் பாதிப்பினை உண்டாக்கும்.

மிகப்பெரிய அளவிலான இடரை ஏற்படுத்தக்கூடிய 34 சிவப்பு பட்டியல் ஆலைகளும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. தற்போதிருக்கும் ஆலைகள் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குக் கட்டுப்படுகிறார்கள் என்பதை TNPCB உறுதிசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் காலமானார்: ஸ்டாலின் நேரில் ஆறுதல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details