சென்னை: தமிழ்நட்டில் பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக.11ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 1,56,278 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அவர்களில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவ.17ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. முதல் சுற்றுக்கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில்பிரிவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்.15 ஆம் தேதி நடைபெற்றது.
10, 11, 12ஆகிய தேதிகளில் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலை பூர்த்தி செய்தனர். தற்காலிக ஒதுக்கீடு 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. 13, 14ஆம் தேதிகளில் மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிச் செய்தோ (அ) வேறுக்கல்லூரியில் சேர்வதற்கான விருப்பத்தையோ பதிவு செய்துள்ளனர்.
முதல் சுற்றுக் கலந்தாய்வில் பொதுப்பிரிவில் 14 ஆயிரத்து 546 பேரில் 12,294 பேர் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்தனர். அவர்களில் 11,595 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 11,626 மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்தனர்.
5,233 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கும் 4,269 மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேலே விரும்பிய இடத்தில் சேரவும், காலியிடம் கிடைத்தால் அளிக்கவும் எனக் கூறியுள்ளனர்.