தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு பணி தீவிரம்

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

பொறியியல் மாணவர் சேர்க்கை

By

Published : Jun 12, 2019, 2:49 PM IST

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தலைவர் விவேகானந்தன், ‘தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மூன்றாவது கட்டமாக சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஜூன் 7ஆம் தேதி முதல் நாளை வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறஉள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களில் இதுவரை 88 ஆயிரத்து 500 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை புரிந்தனர். கூடுதலாக நாளையும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 46 மையங்களில் நடைபெறஉள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வர முடியாத மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி குறுந்தகவல், கூரியர் மூலமும் தகவல்கள் அளிக்கப்பட்டுவருகின்றன. மாணவர்கள் அந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்ட மாணவர்களின் சான்றிதழ் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதன்பின்னர் மாணவர்களை நேரடியாக அழைத்து சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் ஐந்து சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும். கடந்தாண்டை விட இந்தாண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் அதிகளவில் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தலைவர் விவேகானந்தன் செய்தியாளர்கள் சந்திப்பு

கடந்தாண்டு ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பில் 98 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இடங்களில் 78 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 113 பேர் பதிவு செய்திருந்தாலும் நேற்று வரை 88 ஆயிரத்து 500 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், மாணவர்கள் ஆன்லைன் மூலம் தங்களுக்கான இடங்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்த விபரங்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details