தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1,01,916 பேர் விண்ணப்பம்! - பிஇ பிடெக்

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 916 பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.

Engineering
Engineering

By

Published : Jun 28, 2022, 10:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 18 ஆயிரத்து 763 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் 4 ஆயிரத்து 199 மாணவர்கள் கட்டணம் செலுத்தியிருந்தனர், 790 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்திருந்தனர்.

இன்றைய (ஜூன் 28) நிலவரப்படி, பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஒரு லட்சத்து ஆயிரத்து 916 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில், 59 ஆயிரத்து 372 பேர் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர். 31 ஆயிரத்து 319 மாணவர்கள் தங்களது சான்றிதழையும் பதிவேற்றம் செய்துள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.15.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details