சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப்பாடத்திட்டத்தில் 12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பி.இ, பி.டெக் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் தொடங்கியது. மாணவர்கள் சொந்தமாகவும் , தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பித்தனர்.
மேலும் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு 110 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு முதல் நாளான இன்று(ஜூன் 20) 18,763 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.