சென்னைராயப்பேட்டையில் பார் வசதியுடன் உள்ள தனியார் விடுதியில் பாலியல் தொழில் மற்றும் பெண்களை வைத்து அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் அங்கு சட்டவிரோதமாக ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்ததது எனக்கூறப்படுகிறது.
பின்னர் விடுதி உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினர் சிலரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துச்சென்று, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் விடுதியில் நடனமாடியதாக கூறப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, 5க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.