தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

+1 மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 16இல் வெளியீடு - பதினோராம் வகுப்பு

சென்னை: பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவருக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு முடிவுகள் வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

exam
exam

By

Published : Sep 14, 2020, 4:07 PM IST

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது.

இந்தத் தேர்வினை எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்யவேண்டுமென மாணவர்கள் சிலர் விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பம் செய்திருந்த மாணவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் பட்டியல், 'www.dge.tn.gov.in' என்ற இணையதளத்தில் வரும் 16ஆம் தேதி புதன்கிழமை பகல் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் பட்டியலில் இல்லாத பதிவு எண்களுக்கான விடைத்தாளில், எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் அச்சத்தால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

ABOUT THE AUTHOR

...view details