தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடக்கக் கல்வி பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு - Director of Elementary Education Sethuramavarma

சென்னை: தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக் கல்வி பொதுமாறுதல் கலந்தாய்விற்கான தேதியை வெளியிட்டுள்ளார்.

தொடக்கக்கல்வி பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

By

Published : Nov 10, 2019, 5:20 PM IST

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் வருகின்ற 18ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்திற்குள் நடைபெறும் என்றும் அந்தந்த மாவட்ட வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வேறு மாவட்டத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும் என்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கூட்டம் அவர்களுக்கான ஒன்றியம் அல்லது வருவாய் மாவட்டத்திற்ககுள் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 21ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க:

மறுக்கப்பட்ட கல்வி, நீதிமன்றத்தை நாடிய 3 வயது பெண் குழந்தை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details