சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 4) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2021ஆம் ஆண்டுக்கான பசுமை விருதினை, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். அனீஷ் சேகர், விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.