தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேர்தலுக்கான பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து பாஜக பட்டியல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் 34 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஒருங்கிணைப்புப் பணிக்கு சக்கரவர்த்தியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்புப் பணிக்காக துணைத்தலைவர் அண்ணாமலையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊடகப்பிரிவிற்கு பிரசாத்தும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு எச்.ராஜா, வி.பி.துரைசாமி, பேராசிரியர் ராஜலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கலாச்சார குழுவிற்கு நடிகை காயத்ரி ரகுராம், மகளிர் குழுவிற்கு மீனாட்சி, வாக்குச்சாவடி குழுவிற்கு முருகானந்தம் என 34 குழுக்கள் உருவாக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வருகிற 25ஆம் தேதி கோவை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பு