சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல் உயர் அலுவலர்கள் சிலர் செயல்படுவதாக, எதிர்க்கட்சிகள் புகார் அளித்த நிலையில், அவர்களைக் கண்காணித்துப் பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
ஐ.ஜி முருகன் உள்ளிட்ட 10 போலீசார் மாற்றம்
தென் மண்டல ஐ.ஜி முருகன், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் அன்பரசன் உள்ளிட்ட 10 காவல் உயர் அலுவலர்களை தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஜி முருகன் உள்ளிட்ட 10 போலீசார் மாற்றம்
தென்மண்டல ஐ.ஜி முருகன், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் அன்பரசன் உள்ளிட்ட 10 காவல் உயர் அலுவலர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு காவல் பார்வையாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல் உயர் அலுவலர்கள் விவரம் பின்வருமாறு:
- தென்மண்டல ஐ.ஜி முருகன்
- சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் கோவிந்தராஜ்
- வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி திருநாவுக்கரசு
- திருச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி கோபாலச்சந்திரன்
- சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக டி.எஸ்.பி வளவன்
- ராமநாதபுரம் குற்ற ஆவண டி.எஸ்.பி சுபாஷ்
- விழுப்புரம் பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன்
- சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் அன்பரசன்
- சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் வேல்முருகன்
- சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் கிருஷ்ண மூர்த்தி