தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இதுவரையில் ரூ.135.41 கோடி பறிமுதல்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

சென்னை: இதுவரையில் 135.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

ceo

By

Published : Apr 16, 2019, 3:02 PM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சியினரின் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

  • ரூ.135.41 கோடி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • நேற்று மட்டும் ரூ.2.50 கோடி பறிமுதல், அதிகப்படியாக கோவையில் ரூ.1.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.56.55 கோடி வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.69.20 கோடி பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • பி.எஸ்.கே நிறுவனத்தில் இருந்து ரூ.14.17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.37.42 லட்சம் மதிப்பில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.37.68 லட்சம் மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நகை மற்றும் பொருட்களின் விபரம்:

  • இதுவரை ரூ.298 கோடி மதிப்புள்ள 1022 கிலோ தங்கம் மற்றும் 645 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.8.15 லட்சம் மதிப்புள்ள சேலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குகள்:

  • தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக இதுவரை 4,525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை சட்டமன்ற விடுதியில் வருமானவரித்துறை ஆய்வு தொடர்பாக விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரு ஏஜெண்ட் மற்றும் இருவர் மாற்றாக இருப்பார்கள் என்றும் மாலை 6 மணிக்கு மேல் நட்சத்திர பிரசாரகர்கள் உள்பட அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பாக பேட்டிகள் கொடுத்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details