தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று(ஏப்.4) மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் இறுதிக் கட்டப் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டன. முன்னணி வேட்பாளர்களான எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், சீமான், கமல் ஹாசன் உள்ளிட்டோர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளான முறையே எடப்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர், கோவை தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் மாலை ஆறு மணியளவில் இறுதி கட்ட பரப்புரையில் ஈடுபட்டனர்.
ஓய்ந்தது சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை - Election campaign for 2021 TN assembly election over
சட்டப்பேரவை தேர்தல்
18:57 April 04
அனைவரும் பரப்பரை நிறைவடையும் நேரமான மாலை 7 மணிக்கு முன்னர், தங்களின் தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தனர். தேர்தல் பரப்புரை நிறைவு பெற்றதையடுத்து, தொகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளி நபர்கள் தங்கி உள்ளனரா என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்த நபர் கைது!
Last Updated : Apr 4, 2021, 8:45 PM IST