சென்னையில் 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்திற்குப் பிறகு நீதிமன்றம், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் சாலைகளில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற வேண்டும், ஆறுகளைத் தூர்வார வேண்டும், கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என அரசுக்கும், மாநகராட்சிக்கும் அறிவுறுத்தினர்.
2015-க்குப் பிறகு சென்னையின் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து தமிழ்நாடு பட்ஜெட்டில் மட்டும் 6 ஆயிரத்து 744.01 கோடி மதிப்பீட்டிற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பூவுலகின் நண்பர்கள் குழு குற்றச்சாட்டு
ஆனால், இந்தப் பணிகள் நடைபெற்றதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் இவ்வளவு நிதிகளும் எங்கு சென்றன? எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன? 2015ஆம் ஆண்டுக்குப் பின் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என சென்னை மாநகராட்சியை, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியது.
தேர்தல் பரப்புரையின் போது ஈபிஎஸ் பேசியது... இச்சூழலில், முன்னதாக 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் 954 கி.மீ., மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், பெய்துவரும் கனமழையினால் சென்னை தத்தளித்து வரும் நிலையில், அந்த வடிநீர் கால்வாய்கள் எங்கே என சமூகச் செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க:சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் மின்வாரியம் - சும்மா விடமாட்டோம்: சுந்தர்ராஜன் பளீர்