தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் குறித்த விழிப்புணர்வை கலை நிகழ்ச்சிகள் மூலம் நடத்திய இளைஞர்கள்! - Thenthamaraikulam

நாகர்கோவில்: தேர்தல் குறித்த விழிப்புணர்வினை இளைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

awareness

By

Published : Mar 21, 2019, 10:01 AM IST

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகள் மாநிலம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அறிவொளி தீபம் குழுவினர் சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தென்தாமரைகுளம் பேரூராட்சி செயல்அலுவலர் சிவ அருணாச்சலம் தொடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  • மக்களவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும்.
  • தேர்தல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உதவி மைய இலவச அலைபேசி இணைப்பான 1950க்கு போன் செய்து சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
  • வாக்களித்த 7ஆவது வினாடியில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்று உறுதிசெய்த பின்னர்தான் வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வரவேண்டும்

உள்ளிட்டவற்றை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் பாடல் மற்றும் கரகாட்டம் மூலம் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details