தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - மாணவர்கள் பங்கேற்பு! - தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: தேர்தல் குறித்தும் வாக்குகளின் முக்கியத்துவம் பற்றியும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை கிறித்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

mcc
mcc

By

Published : Feb 27, 2021, 12:34 PM IST

சென்னை கிறித்துவக் கல்லூரி இதழியல் துறையை சேர்ந்த மாணவர்கள், தேர்தல், வாக்கு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து, இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 2 நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதில் பல கல்லூரிகளிலும் இருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் நாள் நிகழ்வில், தேர்தல் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதிலளித்தனர். இரண்டாம் நாள் நிகழ்வில், மாணவர்களிடயே தேர்தல் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கவும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - மாணவர்கள் பங்கேற்பு!

இது தொடர்பாக நம்மிடம் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஹரி, "18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு அரசியல் மற்றும் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய வாக்காளர் அட்டை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கவும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்டோர் இதன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்தலுக்குள் விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பது கடினம். ஆனாலும் அந்த மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்" எனத் தெரிவித்தார்.

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - மாணவர்கள் பங்கேற்பு!

இதையும் படிங்க: தேர்தல் உலா - 2021: தூத்துக்குடி எதிர்பார்ப்பும், களநிலவரமும்

ABOUT THE AUTHOR

...view details