சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படும் கரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த 97 வயது முதியவர் சூசை என்பவர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். சிகிச்சையில் முழு குணமடைந்த சூசை, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இதேபோல், சென்னையைச் சேர்ந்த 92 வயதான கணேஷ் என்பவரும், கரோனாவால் நுரையீரல் பாதித்து சர்க்கரை அளவும் அதிகரித்து அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் கணேஷும் குணமடைந்துள்ளார்.