தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தம்பி இறந்த சோகம் தாங்காமல் அண்ணனும் தூக்கிட்டுத் தற்கொலை! - சென்னையில் தம்பி இறந்ததால் அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை

சென்னை, கொரட்டூர் பகுதியில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல், அதே நாளில் அண்ணனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தம்பி இறந்ததால் அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை
தம்பி இறந்ததால் அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை

By

Published : May 5, 2022, 7:34 PM IST

சென்னை: கொரட்டூர் எல்லையம்மன் நகர் 2ஆவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்கு சேட்டு(50), சுரேஷ்(43) என இரு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான சுரேஷுக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும் திருமுருகன், காந்தி ராஜன் என 2 மகன்களும் உள்ளனர்.

இவர் கொரட்டூர் ரயில்வே பாலத்தின் அருகே காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் குடிப்பழக்கதிற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அதிகமான வயிற்று வலியால் சுரேஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது புடவையால் தனக்குத்தானே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய சுரேஷின் மகன் காந்திராஜன் தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக கொரட்டுர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேதனையடைந்த அண்ணன்: இந்த நிலையில் சுரேஷின் அண்ணன் சேட்டு(50), அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரும் தள்ளுவண்டி வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் தனது தம்பி சுரேஷ் இறந்த துக்கம் தாங்காமல் சேட்டு மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அவரது நண்பர்களிடமும் இது குறித்து புலம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேட்டு மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டின் முன் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மகன் ஜோதிகுமார் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பி இறந்த துக்கம் தாங்காமல் ஒரே நாளில் அண்ணனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொரட்டூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம்: சிபிசிஐடி போலீசார் விசாரணை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details