தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

8 ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது! - 8 ஆம் வகுப்பு மாணவி

சென்னை : காதலிக்க மறுத்ததால் 8 ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

attacked
attacked

By

Published : Mar 5, 2020, 12:55 PM IST

Updated : Mar 5, 2020, 2:08 PM IST

அமைந்தகரை முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் நித்தியா (26) என்ற இளைஞர் குடியிருந்து வருகிறார்.

நித்தியா நீண்ட நாட்களாக மாணவியை ஒரு தலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதனை அம்மாணவியிடம் பலமுறைக் கூறியும் அவர் அதனை நிராகரித்துள்ளார். இந்த நிலையில் மொட்டை மாடியில் மாணவி நின்று கொண்டிருந்தபோது அங்கு சென்ற நித்தியா, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, திடீரென நித்தியா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த மாணவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமைந்தகரை காவல்துறையினர், தலைமறைவாக இருந்த நித்தியாவை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை நித்தியாவை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து மாணவி, தற்போது வீடு திரும்பியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: குழந்தைகள் ஆபாச படத்தைப் பகிர்ந்தவர் கைது

Last Updated : Mar 5, 2020, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details