தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்விச்சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல - உயர் நீதிமன்றம்! - சென்னை உயர்நீதிமன்றம்

கல்விச்சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

MHC
MHC

By

Published : May 31, 2022, 8:36 PM IST

சென்னை: கடந்த 2018 - 2021ஆம் கல்வியாண்டுகளில் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, மதுரை, தூத்துக்குடி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பு முடித்த கிரிதரன் உள்ளிட்ட 25 மருத்துவர்கள், மேற்படிப்பில் சேரும் போது எழுதிக் கொடுத்த உத்தரவாதத்தின்படி 2021 மே மாதம் முதல் 10 மாதங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினர்.

அதன்பின் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை வழங்கும்படி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், உத்தரவாத பத்திரத்தில் குறிப்பிட்டபடி 2 ஆண்டுகளை முழுமையாக முடிக்காத காரணத்தால் சான்றிதழ்களைத் தர முடியாது என கல்லூரிகள் மறுத்துள்ளன.

இதையடுத்து, தங்கள் சான்றிதழ்களை வழங்க உத்தரவிடக்கோரி 25 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மனுதாரர்களுடன் படித்த சக மாணவர்கள் சான்றிதழ் கோரி தாக்கல் செய்த வழக்கில், சான்றிதழ்களை திரும்ப வழங்கும்படி மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மனுதாரர்களின் சான்றிதழ்களை 15 நாட்களில் திரும்ப வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கல்விச்சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல எனக் குறிப்பிட்ட நீதிபதி, இந்திய ஒப்பந்தச் சட்டப்படி, சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்துக்கொள்ள முடியாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:TNSTC: 2016ஆம் ஆண்டிற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரையில் ஓய்வூதியம்!

ABOUT THE AUTHOR

...view details