சென்னை:சென்னையில் நாளை நடைபெறும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் (Education Officials meeting) பாலியல் புகார்கள் குறித்த விவரங்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் விவரம் சார்ந்த புள்ளிவிவரங்களுடன் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகார்கள்; ஆசிரியர்கள் கைது, திருநெல்வேலியில் கழிவறை கட்டடம் இடிந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்தது, இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து நடந்துவரும் ஆய்வுகள் போன்ற பரபரப்பான சூழலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் துறையின் உயர் அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.