தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்வி நிலையங்களில் தனியார் நிகழ்ச்சிகள் கூடாது - அரசு அறிவுறுத்தல்!

சென்னை: கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என தனியார் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

highcourt
highcourt

By

Published : Feb 26, 2020, 1:20 PM IST

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சங்கப் பொதுக்குழுவுக்கு சென்னை லயோலா கல்லூரி கூட்ட அரங்கம் வாடகைக்கு விடப்பட்டதை எதிர்த்து பத்திரிகையாளர் சுஜிதா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீதிமன்றமே தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரிக்க பரிந்துரைத்தார்.

அதன்படி, மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றில் அரசின் சலுகை பெறும் பொறியியல், மருத்துவம், பல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகங்களை கல்வி சாராத பிற வணிக நோக்கிற்காக பயன்படுத்துவது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் கல்லூரி வளாகத்தை வணிக நோக்கில் பயன்படுத்தவில்லை என்றும், இதுகுறித்து விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமெனவும் லயோலா கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர் கல்வித் துறை தரப்பில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது என அந்தக் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது என தனியார் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, லயோலா கல்லூரி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நீங்கள் எல்லோரும் போலீஸ் தான் - கூடுதல் கமிஷனர் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details