சென்னை: உக்ரைனில் ஏற்பட்ட போர் காரணமாக இந்தியாவிலிருந்து படிக்கச் சென்ற மாணவர்களை மத்திய அரசின் உதவியுடன் திரும்ப அழைத்து வரப்பட்டனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2,000 மாணவர்கள் திரும்பி வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவப் படிப்பினை படித்தவர்கள் ஆவார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் தங்களுக்கு உக்ரைன் அருகில் உள்ள நாடுகளில் மருத்துவம் படிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவில், உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் உள்ள காலி இடங்களில் உக்ரைனில் பாதியில் கல்வி முடிக்க முடியாமல் திரும்பிய மாணவர்களை நடப்பு கல்வியாண்டில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா திரும்பியுள்ள சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயன் அடைவார்கள். அந்தந்த மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உக்ரைனில் திரும்பிய மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க:'தமிழ்நாடு மாணவர்களை கல்லூரியில் கால் வைக்க விடாத மத்திய அரசு' - செல்வபெருந்தகை