சிகரம் ஆர் சந்திரசேகரின் பிறந்தநாள் மற்றும் அவரின் தந்தையாரின் ஏழாவது நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா - பின்னணி பாடகர் பிரசன்னா
சென்னை: 'வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் தொடர்ந்து நிலைக்க வேண்டுமென்றால் தோல்வி என்ற இடைப்புள்ளியை யார் கடக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும்' என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
விழாவில், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசுகையில், "ஒவ்வொரு மாணவர்களும் படிக்கும் பாடங்களை குருட்டுத்தனமாக மனப்பாடம் பண்ணாமல், உணர்ந்து படித்து உங்கள் லட்சியங்களுக்கு சிறகுகளை கொடுங்கள். வெற்றி என்பது இறுதிப்புள்ளி தோல்வி என்பது இடைப்புள்ளி. வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அந்த வெற்றிகள் தொடர்ந்து நிலைக்க வேண்டுமென்றால் தோல்வி என்ற இடைப்புள்ளியை யார் கடக்கிறார்களோ அவர்கள்தான் தொடர்ந்து வெற்றிகளை பெற முடியும்." என்று தெரிவித்தார்.
இந்த விழாவில், திரைப்பட இயக்குநர்கள் பேரரசு, பொன்ராம், ராஜா, பின்னணி பாடகர் பிரசன்னா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கினர்.