சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வில் மூன்றாவது நாளான நேற்று(ஏப். 08) சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தபின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "97ஆவது அரசியல் சாசன சட்டத்தின்படி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு ஆணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டது.
அதிமுக ஆட்சியில் அம்மா இருந்தபோது, சங்கத் தேர்தல் நடைபெற்று கூட்டுறவு சங்கம் சிறப்பாக இயங்கி வந்தது. அவர் மறைவிற்குப் பின்னும் நடைபெற்றது. அதிமுக கொண்டுவந்த கரணத்தினாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் வேண்டுமென்று குறைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் இப்படித்தான் பேசவேண்டுமா?: திமுக அரசு ஒட்டுமொத்தமாக கூட்டுறவு சங்கங்களை கலைத்து தங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களை கொண்டுவர வேண்டும் என செயல்பட்டு வருகிறது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 நிமிடம் பேசினால், அமைச்சர்கள் 50 நிமிடம் பதிலளித்து நாங்களே முழுவதும் பேசியதாக தெரிவிக்கின்றனர்.