தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அரசின் மௌனம்... மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறி' - எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு நீண்டகாலமாக மௌனம் காப்பதால் மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Edappadi palanisamy tweet CM STALIN government, never fulfilled its election promise on NEET EXAM
Edappadi palanisamy tweet CM STALIN government, never fulfilled its election promise on NEET EXAM

By

Published : Jul 13, 2021, 10:10 PM IST

சென்னை: வரும் செப்டம்பர் 12ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு நீண்டகாலமாக மௌனம் காப்பதால் மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகிவிட்டது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என முதலமைச்சரை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமும் பலமுறை வலியுறுத்தியும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியதின் விளைவு; இன்று மாணவர்களின் மருத்துவக்கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

எப்போதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத இந்த அரசு, அதிமுக அரசு செயல்படுத்திய நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கப் பெறுவதில் இடையூறு ஏற்படுத்தாமல், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அதிமுக அரசு அளித்ததுபோல உரிய பயிற்சிகள் வழங்கி உறுதுணையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details