தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி - கனமழை

சென்னை புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பொருள்களை வழங்கினார்.

உணவு வழங்கிய எடப்பாடி பழனிசாமி
உணவு வழங்கிய எடப்பாடி பழனிசாமி

By

Published : Nov 13, 2021, 9:58 PM IST

சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பல இடங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூட்டாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு வழங்கிய எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து ஆவடி பகுதிக்கு வந்த அவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு, உடை, போர்வை, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

இதையும் படிங்க:திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details