தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு - எடப்பாடி பழனிசாமி நாளை ஆளுநருடன் சந்திப்பு - Edappadi Palanisamy

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு என்பது போன்ற கோரிக்கைகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை(அக்.20) ஆளுநர் ரவியை சந்திக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

By

Published : Oct 19, 2021, 4:31 PM IST

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை(அக்.20) காலை 11 மணிக்கு சந்திக்கிறார்.

இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் விவரங்கள் அடங்கிய புகார் மனுவை எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் வழங்குகிறார்.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வீட்டில் ரெய்டு நடந்தபோது, எடப்பாடி பழனிசாமி முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.

அப்போது, திமுக அரசு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், ஆளுநர் ரவியை முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்தது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா

ABOUT THE AUTHOR

...view details