தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், “மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் அதிமுக காவிரி டெல்டா பகுதியை காவேரி வேளாண் மண்டலமாக அறிவித்ததை உறுதி செய்வதற்கான தீர்மானத்தை ஏன் எடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
‘ஆட்சியில் இருந்தபோது டெல்டாவை ஏன் வேளாண் மண்டலம் ஆக்கவில்லை?’ - திமுகவுக்கு ஈபிஎஸ் கேள்வி - edappadi palanisamy
சென்னை: இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக, ஆட்சியில் இருந்தபோது காவிரி டெல்டா பகுதிகளை ஏன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் - எடப்பாடி
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக, ஆட்சியில் இருக்கும் பொழுது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை வைத்து காவிரி டெல்டா பகுதியில் ஏன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றவில்லை. திமுக ஆட்சியில்தான் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற மக்களுக்கு கேடு விலைவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டன” என்று தெரிவித்தார்.