தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை.. சாதாரண மக்களுக்கு தமிழக அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் - எடப்பாடி பழனிசாமி கேள்வி - ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து போராட்டம்

ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு தமிழ்நாடு அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்றும் அவர் வினவியுள்ளார்.

edappadi-palanisamy-has-questioned-how-dmk-a-govt-can-provide-security-to-ordinary-people-if-tamil-nadu-governor-has-no-securityதமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை.. சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் OR முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் - எடப்பாடி
edappadi-palanisamy-has-questioned-how-dmk-a-govt-can-provide-security-to-ordinary-people-if-tamil-nadu-governor-has-no-security தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை.. சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் OR முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் - எடப்பாடி

By

Published : Apr 20, 2022, 7:48 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் திருமடத்தில் நடைபெறும் பவளவிழா ஆண்டு நினைவு கலையரங்க கட்டட அடிக்கல் நாட்டு விழா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் புஷ்கர விழாவிற்கு தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் செல்லும் ஞான ரதயாத்திரையைத் தொடங்கி வைக்கும் பணிக்காக தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சென்றார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, தமிழர் உரிமை இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமுமுக உட்பட பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆளுநர் வாகனம் முன்பு, கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் வாகனத்தை நிறுத்தி மறைத்ததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், கையில் வைத்திருந்த கருப்புக்கொடி மற்றும் பதாகைகளை வாகனங்கள் மீது எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோ பேக், கோ பேக் ஆளுநர் என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

ஆளுநர் முதலமைச்சர்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேலும், தமிழகத்திலேயே, தமிழ்நாடு ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழ்நாடு ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாடு ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து போராட்டம்

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை அதிமுக ஒருபோதும் ஏற்காது என்பதோடு, இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2 சூரியன்கள் ஆள்கின்றன - தருமபுரம் ஆதீனம்; இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன் - ஆளுநர்!

ABOUT THE AUTHOR

...view details