மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், ”திமுகவினரின் ரவுடித்தனங்களை தொலைக்காட்சிகளின் வாயிலாக நாம் பார்த்திருக்கிறோம். எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் வாழ முடியுமா அல்லது வாழத்தான் விடுவார்களா?
திமுக என்றாலே ரவுடி கட்சி என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதிமுக அரசில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் தொழில் செய்வோர் நிம்மதியாக தொழில் புரிவதற்கும் அதிமுக அரசுதான் உறுதுணையாக இருக்கும். ஹோட்டல்களில் சாப்பிட்டால் காசு கொடுக்கும் வழக்கம் திமுகவினருக்கு இல்லை. அப்பாவி மக்கள் பலரது நிலங்களை தங்கள் பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டவர்கள் திமுகவினர். பின்னர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தபோது ஏறக்குறைய 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுத்தார்.