தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது பக்கத்தில், '2020ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 775 என்றிருந்த போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினார்.
டாஸ்மாக்கை மூடக் கோரிக்கை
இன்று கரோனா தொற்று பாதிப்புகள் சுமார் 24,000-யும் தண்டியுள்ளது. தற்போது திமுக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?. எனவே, உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அத்தோடு கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும்வரை, டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை வலியுறுத்திறேன் என்றும் அந்தப் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைக்கவசத்துடன் கூடிய தபால் பெட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அஞ்சல் துறையினர்!