சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆவது நாள் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று (அக். 18) தொடங்கியது. அப்போது ஈபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாகரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அப்பாவு கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டும்.
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் தர்ணா
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஈபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாகரிடம் வாக்குவாதம் செய்து அமளியில் ஈடுபட்டனர்.
edappadi k palaniswami faction mla in assembly
இப்போது வாக்குவாதம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார். இருப்பினும் அதிமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம் செய்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அதன்பின் தர்ணாவில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அவையின் மாண்பை கெடுக்கும் வகையில் நடந்துகொள்வதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது