சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.
அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மொழிப்போர் தியாகிகளை கௌரவிக்கும் விதமாக தனது ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில் "இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப நம் அன்னை தமிழின் சுயமரியாதை காக்க, வீறு கொண்டு எழுந்து கடுமையாக போராடி, தங்கள் இன்னுயிரை ஈந்து, தாய் தமிழுக்கு காவல் நின்ற மொழிப்போர் தியாகிகளுக்கு எனது செம்மார்ந்த வீரவணக்கங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மொழிப்போர் தியாகிகள் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும்- அர்ஜுன் சம்பத்