தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யாரை சொல்கிறார் எடப்பாடியார்; புகைச்சலை ஏற்படுத்திய புதுகுண்டு? - புகைச்சல்

ஜாதி, மதம் அடிப்படையில் இங்கு யாரும் அரசியல் செய்வது கிடையாது. இவைகளுக்கு அப்பாற்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது அதிமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

edapadi

By

Published : Aug 10, 2019, 11:54 PM IST

தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இருப்பினும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இதில் பாஜக இந்துத்துவா கொள்கைகளை கொண்டுள்ள கட்சி. சர்ச்சைக்குரிய வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பாஜக தலைவர்களும் இந்துத்துவாவை 'தூக்கி பிடித்து' வருகின்றனர். அதோடு பாஜகவின் ஆணி வேர் இந்துத்துவாவை கொள்கையாக கொண்டுள்ள 'ஆர்எஸ்எஸ்' தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய சமுதாய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக உள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சமுதாய மக்களின் ஓட்டுக்களே அதிக அளவில் உள்ளது. இதேபோல் புதிய நீதிக் கட்சி முதலியார் இன மக்களுக்காகவும், புதிய தமிழகம் தேவேந்திர குல மக்களையும் பிரதானமாக கொண்டு இயங்கும் கட்சிகள் ஆகும். இந்த கட்சிகள் குறிப்பிட்ட இன மக்களுக்காக அந்த மக்களால் இயக்கப்படும் கட்சி என்பதால், குறிப்பிட்ட பகுதியில் இவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.

எடப்பாடி பழனிச்சாமி

இதனால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களைதான் பெரும்பாலும் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக நிறுத்துகின்றன. அன்புமணி ராமதாஸ், ஏ.கே. மூர்த்தி, ஏ.சி. சண்முகம், கிருஷ்ணசாமி ஆகியோர் இப்படித்தான் வேட்பாளர்களாக களமிறங்கி வருகின்றனர். இவ்வாறாக சாதி, மதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் கட்சிகளோடு அதிமுக கூட்டணி அமைத்து வருகிறது. வேலூர் தேர்தலில் பாமக கூட்டணியோடு முதலியார் சமூகத்தை சேர்ந்த ஏ. சி. சண்முகத்தையே வேட்பாளராக அதிமுக களமிறக்கியது.

இப்படி இருக்கையில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சென்னையில் பேசும்போது, சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜாதி, மதம், இனம், மொழி இதற்கெல்லாம் அப்பாற்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இன்றைக்கு தமிழகம்தான் அமைதி பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே மதத்தின் அடிப்படையிலோ, ஜாதியின் அடிப்படையிலோ யாரும் இங்கு அரசியல் செய்வது கிடையாது என்று பேசி உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி-2
தங்களது கூட்டணியிலேயே மதம், சாதியை பிரதான கொள்கையாக கொண்டிருக்கும் கட்சிகளை இணைத்து அவர்களையே பெரும்பாலும் வேட்பாளர்களாக நிறுத்தி அவர்களுக்காக வாக்கு சேகரிப்பில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் இப்படி பேசி இருப்பது கூட்டணி கட்சிகளுக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details